விக்ரம் படம் ஓடிடி’யில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. ஜூன் 3 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மிகப்பெரும் அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து இன்னமும் பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனிருத்தின் இசை மற்றும் சூர்யாவின் சிறப்புத் தோற்றம் என படத்த்தின் வெற்றிக்கு மேலும் பலமாக அமைந்தது.
இந்நிலையில், இத்திரைப்படத்தை மிகப்பெரும் விலை கொடுத்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இப்படத்தை வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்திருக்கிறது.