ஓடிடி’யில் வெளியானது கமல்ஹாசனின் விக்ரம்!

 ஓடிடி’யில் வெளியானது கமல்ஹாசனின் விக்ரம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மற்றும் காயத்ரி நடிக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”.

ஜூலை 3 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் அனைவராலும் பெரிதாக கொண்டாடப்பட்டது.

இதுவரை சுமார் 400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலை வாரிக்குவித்துள்ளது.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.

படம் வெளியாகி 35 நாட்கள் மேலாகிவிட்ட நிலையில், தற்போது இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்படத்தை அதிக விலை கொடுத்து இப்படம் வாங்கியிருக்கும் இந்நிறுவனம் நேற்றிரவில் இருந்து இப்படத்தின் ஒளிபரப்பை துவக்கியிருக்கிறது.

 

Related post