விக்ரம் பட ப்ரொமோஷன்; சூப்பர் ஸ்டாரை சந்தித்த உலக நாயகன்!

 விக்ரம் பட ப்ரொமோஷன்; சூப்பர் ஸ்டாரை சந்தித்த உலக நாயகன்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. வரும் வெள்ளியன்று பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இதற்காக கமல்ஹாசன், பல மாநிலங்களுக்கு பல நாடுகளுக்கு படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக சென்று கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில், நடிகரும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களை நடிகர் கமல்ஹாசன் அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார். உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சென்றிருக்கிறார்.

இச்சந்திப்பு படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க கமல் அழைப்பு விடுத்ததற்காக மட்டும் தான் என்ற தகவல் வெளியே வந்தாலும், மற்றொரு தகவல் கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கமல் தயாரிக்க இருப்பதாகவும் அதற்காகவே இச்சந்திப்பு நடந்திருக்கலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

Related post