விக்ரம் வெற்றி; ஊழியர்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்திய பிரபல தியேட்டர் ஓனர்!

 விக்ரம் வெற்றி; ஊழியர்களுக்கு பிரியாணி கொடுத்து அசத்திய பிரபல தியேட்டர் ஓனர்!

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வசூலிலும் பட்டையை கிளப்பியது.

விநியோகஸ்தரர்கள் ஆரம்பித்து திரையரங்கு உரிமையாளர்கள் வரை அனைவரும் இப்படத்தின் மூலம் நல்ல லாபம் சம்பாதித்தனர்.

இந்நிலையில், சென்னையில் பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கில் விக்ரம் படத்தின் வெற்றியைக் கொண்டாட நினைத்து, திரையரங்கின் ஓனர் ஊழியர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

படம் ஓடிடி’யில் வெளியான போதும் திரையரங்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக இப்படத்திற்காக சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

Related post