இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் “விக்ராந்த் ரோனா” படக்குழு!
ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் கிச்சா சுதீப். இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ராந்த் ரோணா’. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இப்படத்தில் நிரூப் பண்டாரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்தை ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர்.
இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 3டியில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிடவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விக்ராந்த் ரோணா விரைவில் திரைக்கு வர இருக்கிறது.