பொங்கலை குறி வைத்த விமல் மற்றும் யோகிபாபு!!

 பொங்கலை குறி வைத்த விமல் மற்றும் யோகிபாபு!!

விஜய் வெளிவந்த “தமிழன்”, துணிச்சல், டார்ச் லைட் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அப்துல் மஜீத்.

இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்க புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

சில இடைத்தரகர்கள் தங்கள் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து ஜனரஞ்ஜகமாக இப்படம் பேசுகிறது என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

விமல் ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பல நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நடந்து முடிந்துள்ள நிலையில் கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்க இருக்கிறது. அதை முடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page