மதுரையில் மிக பிரம்மாண்டமான விழா… “விருமன்” படக்குழு ரெடி!

 மதுரையில் மிக பிரம்மாண்டமான விழா… “விருமன்” படக்குழு ரெடி!

2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள இந்த படத்தின் ஒரு பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழு, ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

அதுவும் மதுரையில். ராஜா முத்தையா மன்றம், தல்லாக்குளத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

 

Related post