தெலுங்கு ரசிகர்களுடன் “வீரமே வாகை சூடும்” திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் விஷால் !

 தெலுங்கு ரசிகர்களுடன் “வீரமே வாகை சூடும்” திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் விஷால் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக நாளை 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. இப்பட வெளியீட்டை தனது தெலுங்கு ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்து கொண்டாடவுள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் விஷால் பொதுவாக தனது அனைத்து பட வெளியீட்டுக்கும் தமிழகத்தில் தான் இருப்பார் இங்கு ரசிகர்களுடன் பத்திரிகை நண்பர்களுடனும் பிஸியாக பட வெளியீட்டை கொண்டாடுவார் ஆனால் இந்த முறை அவர் ஹைதராபாத்தில் அவரது அடுத்த படமான #லத்தி ஷீட்டிங்கில் பிஸியாக மாட்டிக்கொண்டார்.

20 நாள்களாக “லத்தி” படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. பீட்டர் ஹெய்ன் பங்கேற்க, விஷால் பங்கேற்கும் சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் வீரமே வாகை சூடும் பொது முடக்கத்திற்கு பிறகு பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் தமிழை விட ஆந்திராவில் அதிக எண்ணிக்கையிலான 750 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் 560க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழை போலவே தெலுங்கிலும் நடிகர் விஷாலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால் முதல் முறையாக தனது படவெளியீட்டை நாளை ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் கொண்டாடவுள்ளார்.

Related post