நடிகையுடன் விஷால் திருமணம்… விரைவில் அறிவிப்பு!
நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நாடோடிகள், குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அப்படங்கள் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை அபிநயா வாய் பேச இயலாதவர்.
இந்நிலையில், அபிநயாவும் விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ செய்தி வரும்வரை காத்திருப்போம்…