மிரட்டல் லுக் கொடுத்த விஷாலின் “மார்க் ஆண்டனி”!
விஷால் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் “மார்க் ஆண்டனி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
நடிகர் விஷால் நடிக்கும் லத்தி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், AAA படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படமாக உருவாக இருக்கிறது “மார்க் ஆண்டனி”.
இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் எஸ் ஜே சூர்யா. இந்த படத்திற்காக சென்னையில் மிகப்பெரும் செட் வேலைகளும் நடைபெற்று வருகிறது. முக்கியமான சண்டைக் காட்சி அதில் படமாக்கப்படவிருக்கிறது.
இந்நிலையில், விஷாலின் பிறந்தநாளான நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
முகத்தில் முழுக்க தாடியோடும், கையில் துப்பாக்கி ஏந்தியும் விஷால் இருக்கும்படியான போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
பல மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தினை, தனுஷின் முன்னாள் மேனேஜர் எஸ் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.