ஆன்லைன் ரம்மி – சரத்குமாரை சீண்டிய விஷால்..!!

 ஆன்லைன் ரம்மி – சரத்குமாரை சீண்டிய விஷால்..!!

விஷால் நடிக்க உருவாகியிருக்கும் லத்தி திரைப்படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளா விஷால்.

சேலத்தில் ரசிகர்களை சந்தித்தபின், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய விஷால், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். பலரது தற்கொலைக்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன்.

உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு உதவும். தவறான வழிகளில் கிடைக்கும் பணம் நிலைக்காது. மற்றவர்கள் சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன். நடிப்பதும், நடிக்காததும் அவரவர்கள் விருப்பம். பாதிக்கப்படுபவர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும்” என்றார்.

சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டினை ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page