விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை – விஷால்

 விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை – விஷால்

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தான் “லத்தி”.

இப்படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய, “ இந்த விழாவிற்கு வருகை தந்த எனது நண்பன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி. கடவுள் அருள் இருந்தால் நானும் விஜய்யை வைத்து படம் இயக்குவேன்.

நானும் ஒரு இயக்குனராக விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

லத்தி படத்திற்காக அதிகம் உழைத்துள்ளோம். இம்மாதம் 22 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்” என்று கூறினார்.

ராணா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

Related post