பீஸ்ட் படத்தை ஓரங்கட்டும் விக்ரம்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

 பீஸ்ட் படத்தை ஓரங்கட்டும் விக்ரம்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் முதல் முறையாக இவரோடு இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வரும் ஜுன் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், இப்படம் பல மொழிகளில் வெளியாவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கேரளாவில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் விக்ரம் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இது பீஸ்ட் படத்தை விட அதிகம்.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது “விக்ரம்”. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Related post