வெந்து தணிந்தது காடு வெற்றி; கார், பைக்கை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்!

 வெந்து தணிந்தது காடு வெற்றி; கார், பைக்கை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “வெந்து தணிந்தது காடு”.

இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான்.. படம் வசூல் ரீதியாக நல்லதொரு வெற்றியைக் கொடுத்திருப்பதாக தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் நாயகனான சிம்புவுக்கு ரூ.92 லட்சம் மதிப்புள்ள Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.

தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம்..

 

Spread the love

Related post