விட்னஸ் விமர்சனம்

 விட்னஸ் விமர்சனம்

ஷ்ரதா ஸ்ரீநாத், ரோகினி, சுபத்ரா ராபர்ட் மற்றும் சிலர் நடித்த படம் தான் “விட்னஸ்”. இப்படத்தை தீபக் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்துவேல் மற்றும் எஸ்.பி.சாணக்யா இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.

கதைப்படி,

பார்த்திபன் என்ற 20 வயது இளைஞர், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது உயிரிழக்கிறார்.

அந்த இளைஞரது அம்மாவான இந்திராணி(ரோகினி), ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி(ஷ்ரதா ஸ்ரீநாத்) என்ற இளம் கட்டடக் கலைஞர் இந்திராணி்யிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள். அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வழக்கு என்ன ஆனது? நீதி கிடைத்ததா? என்பதே மீதிக் கதை….

மகனை இழந்த தாயக, பல வலிகளை கொண்ட ஒருவராக அத்தனை நேர்த்தியான முகபாவனையை வெளிப்படுத்தி. அவ்வலியை நம்மையும் உணர வைத்துள்ளார் ரோகினி.

கதைக்கும் ஓட்டத்திற்கும் சம்பந்தில்லாத ஒரு பாத்திரமாக ஷ்ரதா வந்தாலும். இக்கதைக்கு அவரே ஆரம்பம்.

என்ன தான் மாநகராட்சியின் அவலத்தையும், பிராமணர்களின் தீண்டாமையையும் போட்டு பொலந்த்திருந்தாலும். நீதிபதியாக வந்ததும் பிராமணரே.

மலக்குழியில் மனிதர்களே இறங்கி மலம் அள்ளுவதால், ஏற்படும் உயிரிழப்புகளை மையமாக வைத்து நல்ல திரைக்கதையில் சமூக பிரச்சனையை உரக்க பேசியுள்ளது “விட்னஸ்”.

விட்னஸ் – மிக முக்கியம் –  (3.75/5)

Related post