தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய தீர்மானங்கள்; சலசலப்பான பொதுக்கூட்டம்!!

 தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய தீர்மானங்கள்; சலசலப்பான பொதுக்கூட்டம்!!

சென்னை தேனாம்பேட்டையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவரான முரளி ராமநாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சங்க விதிகளில் திருத்தம் செய்து இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் சலசலப்பு ஏற்பட்டது.

தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுகான தேர்தலில் போட்டியிடுவோர், இதற்கு முன்பு ஒருமுறை நிர்வாகியாகவோ அல்லது 2 முறை செயற்குழு உறுப்பினராகவோ இருந்திருக்க வேண்டும் எனவும்,2 திரைப்படங்களை தயாரித்து, அதை குறைந்தபட்சம் 25 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் மட்டுமே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர், தீர்மானத்திற்கு எதிராகவும், தேர்தல் தேதியை அறிவிக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் எஸ் ஏ சந்திரசேகர், ஜே எஸ் கே சதீஷ்குமார் மற்றும் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட சிலர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related post