பெண் குழந்தைக்கு தந்தையான யோகி பாபு!!

 பெண் குழந்தைக்கு தந்தையான யோகி பாபு!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் மட்டுமல்லாது ஹீரோவாகவும் முத்திரை பதித்து வருபவர் தான் யோகிபாபு.

இவரின் நடிப்புத் திறனைப் பாராட்டி தமிழக அரசால் 2021ம் ஆண்டு கலைமாமணி’ பட்டம் அளிக்கப்பட்டது.

தற்பொழுது எழுத்தாளராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டு பன்முக கலைஞராக வெள்ளித்திரையில் உலா வருகிறார் நடிகர் யோகி பாபு.

இவருக்கு கடந்த 2020 ஆண்டு, மஞ்சு பார்கவியுடன் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் முடிந்தது. ஏற்கனவே, இவர்களுக்கு ஏற்கனவே விஷாகன் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், அக்டோபர் 23 ஆம் தேதி அன்று இரண்டாவதாக ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது, அவர்களது குடும்பத்தினர்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தியாக அமைந்துள்ளது.

 

Related post