நான் ஹீரோ இல்ல மக்களே.. நம்பாதீங்க.. – ”தாதா” படத்திற்கு யோகிபாபு வைத்த செக்!

 நான் ஹீரோ இல்ல மக்களே.. நம்பாதீங்க.. – ”தாதா” படத்திற்கு யோகிபாபு வைத்த செக்!

நிதின் சத்யா ஹீரோவாக நடிக்க கின்னஸ் கிஷோர் இயக்கத்தில் தாதா என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், யோகிபாபுவின் புகைப்படம் பெரிதாக காணப்பட்டது. அப்போது நான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்று யோகி பாபு கூறியிருந்தார்.

தற்போது வெளியான தாதா படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டின் போஸ்டரிலும் யோகி பாபுவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை தனது ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் யோகி பாபு, ‘இந்த படத்தில் நான் ஹீரோ கிடையாது. இதன் ஹீரோ நிதின் சத்யா தான். அவருக்கு நண்பராக நான் நடித்துள்ளேன். நான் ஹீரோ இல்லை மக்களே நம்பாதீங்க’ என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து நான் இந்த படத்தில் ஹீரோ இல்லை என்று கூறி வரும் யோகிபாபு, தன்னை முன்னிலைப்படுத்தி பட போஸ்டர் வெளியிடுவது கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

 

Related post