இசையுலகில் 25 ஆண்டுகள்… கொண்டாடும் ரசிகர்கள்!!

 இசையுலகில் 25 ஆண்டுகள்… கொண்டாடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் இசையுலகில் கடந்த 20 வருடமாக, 10 பேரிடம் நீங்கள் யார் ரசிகன் என்று கேட்டல் குறைந்த பட்சம் அதில் 5 பேராவது நான் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகன் என்று தான் கூறுவார்கள்.

அந்த சதவிகிதம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தனக்கென்று ஒரு முத்திரை, தனக்கென்று ஒரு ஸ்டைல், தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் என்று ஒரு படைபலத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்த யுவன் சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அங்கு கிடைத்த வரவேற்பால் உள்ளம் மகிழ்ந்த யுவன், சென்னையிலும் கச்சேரி நடத்த திட்டமிட்டு, கச்சேரிக்கு ‘யு & ஐ’ என்று பெயரும் வைத்தார்.

செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.

அறிவிப்பு வெளியானது முதல், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் களிக்க யுவனின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் யுவன். இந்த இசை மாயாஜாலத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர்.

Related post