சபரி விமர்சனம்-2.5/5

 சபரி விமர்சனம்-2.5/5

இயக்கம்: ANIL KATZ

நடிகர்கள்: வரலக்‌ஷமி சரத்குமார், மைம் கோபி, கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷாங்

இசை: கோபி சுந்தர்

ஒளிப்பதிவு: ராகுல் ஸ்ரீவத்சவ், நானி

படத்தொகுப்பு: தர்மேந்திரா கக்கராலா

தயாரிப்பாளர்: மகேந்திர நாத் கொண்ட்லா

கதைப்படி,

சிறு வயதிலேயே தனக்கு எல்லாமுமாக இருந்த தாயை இழந்து விடுகிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார். வரலக்‌ஷ்மியின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

சித்தியின் கொடுமையை அவ்வப்போது அனுபவிக்கும் வரலக்‌ஷமி, தனது தாயை நினைத்து கலங்குகிறார்.

வருடங்கள் உருண்டோட, கணேஷ் வெங்கட்ராமை காதலித்து அந்த வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார். அழகான பெண்குழந்தை பிறக்கிறது இருவருக்கும்.

இந்நிலையில், பணி புரியும் இடத்தில் கணேஷ் வெங்கட்ராம் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். இந்த விஷயம் வரலக்‌ஷ்மிக்கு தெரியவர கணேஷ் வெங்கட்ராமை பிரிகிறார்.

Actress Varalakshmi Sabari Movie HD Stills

சிங்கிள் மதராக தனது மகளை வளர்க்க நினைக்கிறார். இச்சமயத்தில் தான், தனக்குப் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகவும், தான் வளர்க்கும் குழந்தை வெறொருவரின் குழந்தை என்று அறிகிறார் வரலக்‌ஷ்மி.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகியாக ஜொலித்திருக்கிறார் வரலக்‌ஷமி சரத்குமார். தனது மகளை காணாமல் ஏங்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வழக்கமான நடிப்பை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். பல படங்களில் பார்த்த ஒரு கதையே இப்படத்திலும் இருப்பதால், கதையோடு நம்மால் ஒன்றி பயணிக்க முடியவில்லை.

காட்சியப்படுத்துவதில் பாஸ் ஆகியிருந்தாலும், கதையில் கோட்டை விட்டிருப்பதால் படத்திற்குள் நம்மால் பயணப்பட முடியவில்லை.

இசை பெரிதாக கதையோடு ஒட்டவில்லை. ஒளிப்பதிவு நமக்கு சற்று ஆறுதல்.

சபரி – ஜொலிக்கவில்லை…

Related post