சிம்பு படத்தோடு மோதும் விஜய் சேதுபதி படம்

 சிம்பு படத்தோடு மோதும் விஜய் சேதுபதி படம்

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் பத்து தல. படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சில தினங்களுக்கு முன் படத்தின் சிங்கிள் வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்க உருவாகியிருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகமும் அதே மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

ஒரே நேரத்தில் இரண்டு பெரும் நடிகர்களின் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா விருந்து காத்திருக்கிறது.

viduthalai, vijay sethupathi, simbu, paththu thala

Related post