7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி !

 7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி !

7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி !
மெகா பட்ஜட்டில் தயாரிக்கும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன்!!

சுசீந்திரன் அறிவிப்பு.

இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய பட்ஜட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

Related post