பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வாள் எடுக்கும் திரைப்படம்

 பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வாள் எடுக்கும் திரைப்படம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஊறி போன அழுக்கு சிந்தனைகளின் மீது ஆசிட் ஊற்றி சுத்தம் செய்ய வருகிறது எம் ஜி பி மாஸ் மீடியா தயாரித்திருக்கும் புது திரைப்படம்.

இத்திரைப்படத்தை பொறுத்தவரை வணிக நோக்கம் என்பது இரண்டாம் பட்சம்தான். சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக, மாரிச்செல்வனின் கதைக்கு திரைக்கதை அமைத்து, இயக்கியிருப்பதோடு நடிகராகவும் அறிமுகம் ஆகிறார் ஈஷான்.

 

கதாநாயகியாக மும்பையை சேர்ந்த ப்ரனாலி அறிமுகம் ஆக, மற்ற கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், ரமா, கல்கி ராஜா, ரமேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பிரபலமானோர் நடித்திருக்கின்றனர்.

Related post