நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா காலமானார்!

 நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா காலமானார்!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தமிழ் சினிமாவில் 40 ஆண்டுளுக்கும் மேலாக கோலோச்சி வந்தவர் மனோபாலா..

கடந்த சில வருடங்களாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்து வந்தார் மனோபாலா.. இவருக்கு வயது 69.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோபாலா, பின் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சற்று முன் அவர் காலமானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது..

இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவருக்கு உஷா என்ற மனைவியும் ஹரீஷ் என்ற மகனும் உள்ளனர்.

சுமார் 1000 படங்களுக்கும் மேல் பல மொழிகளில் நடித்த ஜாம்பவனாக திகழ்ந்தார் மனோபாலா.

Related post