ரத்னம் விமர்சனம் –  3/5

 ரத்னம் விமர்சனம் –  3/5

இயக்கம்: ஹரி

நடிகர்கள்: விஷால், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விஜயகுமார், கெளதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, முரளி ஷர்மா, முத்துகுமார், ஹரீஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், கும்கி அஸ்வின், டெல்லி கணேஷ்

ஒளிப்பதிவு: எம் சுகுமார்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் சந்தானம் & ஜீ ஸ்டூடியோஸ்

தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் & ஜீ ஸ்டூடியோஸ்

படத்தொகுப்பு: ஜெய்

கதைப்படி,

படத்தின் ஆரம்பத்திலேயே கொள்ளைகார கும்பல் ஒன்று, ஓடுகின்ற பஸ்ஸை பள்ளத்தில் தள்ளி அவர்களை கொலை செய்து அவர்களிடம் இருக்கும் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கிறது.

அதன்பிறகு நிறைமாத கர்ப்பிணி பெண், வேலூர் மார்க்கெட்டில் தஞ்சம் அடைகிறார். அவருக்கு ஆண்மகன் பிறக்கிறார். சில வருடங்களில் அந்த பெண் இறந்துவிட, சிறுவனோ அந்த மார்க்கெட்டிலேயே தங்கி விடுகிறார்.

அச்சமயம, மார்க்கெட் ரெளடியாக இருக்கும் சமுத்திரக்கனியை கொல்ல வந்தவர்களை அச்சிறுவன் கொன்று ஜெயிலுக்குச் சென்று விடுகிறான். சிறையிலிருந்து மீண்டு வந்து அச்சிறுவன் காப்பாற்றுகிறார்.

சிறையிலிருந்து வெளியே வரும் அச்சிறுவன், சமுத்திரக்கனிக்கு வலதுகரமாக இருக்கிறார். தனது உயிரைக் காப்பாற்றிய அச்சிறுவனை சமுத்திரக்கனி உயிராக வளர்த்து வருகிறார்.

அச்சிறுவனே ரத்னமாக(விஷால்) வந்து நிற்கிறார்.

பக்கத்து ஊரில் இருந்து தேர்வு எழுதுவதற்காக வேலூர் வரும் ப்ரியா ப்வானி சங்கரை பார்க்கிறார் விஷால். ப்ரியா பவானி சங்கரை கொலை செய்வதற்காக ஆந்திராவின் நஹரியில் இருந்து முரளி ஷர்மாவின் ஆட்கள் வேலூர் வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து ப்ரியாவை காப்பாற்றுகிறார் விஷால். ப்ரியாவிற்காக எத்தனை உயிரை வேண்டுமானாலும் எடுப்பேன், எனது உயிரையும் கொடுப்பேன் என்று துணிந்து இறங்குகிறார்.

ப்ரியா மீது விஷாலுக்கு காதலை தாண்டிய ஒரு பந்தம் இருக்கிறது. அது என்ன.?

வில்லன்களுக்கும் விஷாலுக்கும் ஒரு பூர்விக பகை ஒன்றும் இருக்கிறது. அது என்ன.?

இதுவே ரத்னம் படத்தின் மீதிக் கதை…,

ஆறடி உயரத்தில் ஆயிரம் பேரையும் அடித்தாலும் நம்பக்கூடிய ஆக்‌ஷன் அவதாரமாக உயர்ந்து நிற்கிறார் விஷால். மொத்த படத்தில், பாதி படம் ஆக்‌ஷன் அதகளமாகவே இருக்கிறது.

படத்தில் மொத்தமாக எட்டு சண்டைக் காட்சிகள். எட்டுமே வேறு வேறு களத்தில் வேறு வேறு விதமாக அதிரடி காட்டியிருக்கிறார்கள். அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுவது போல் அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஹரி படம் என்றாலே செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என்ற இந்த இரண்டிற்கும் பஞ்சம் இருக்காது, அதை எந்த இடத்திலும் இப்படத்திலும் பஞ்சம் வைக்கவில்லை.

லாஜிக் ஓட்டைகள் அநேக இடங்களில் எட்டிப் பார்த்தாலும், திரைக்கதையின் வேகம் அதை அளவாக ஈடுகட்டிருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் எதுவும் ஜொலிக்கவில்லை.., பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சிங்கிள் ஷார்ட் என்ற பெயரில் எடுக்கப்பட்ட காட்சியை பார்த்தது “ஏன்.. இப்படி” என்று தான் கேட்க தோன்றியது.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

அதிலும், ப்ரியா பவானி சங்கருக்கு கூடுதல் பொறுப்பு… அதையும் அவர் திறம்படவே கையாண்டிருக்கிறார்.

படத்தில் மொத்தமாக ரத்தம் தெறிக்க தெறிக்க எட்டு சண்டைக்காட்சிகள் என்பதால் படம் முழுக்க முழுக்க அதிரடிதான் இருக்கிறது.

ஹரி படத்தில் என்ன எதிர்பார்த்து திரையரங்கிற்குள் செல்வோமோ அதில் அவர் எந்த குறையும் வைக்கவில்லை. செண்டிமெண்ட் தவிர….

மொத்தத்தில்,

ரத்னம் – ரத்தம்

Related post