விடா முயற்சி படக்குழுவினருக்கு மருத்துவ முகாம்.. அஜித் ஏற்பாடு!?

 விடா முயற்சி படக்குழுவினருக்கு மருத்துவ முகாம்.. அஜித் ஏற்பாடு!?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உருவாகி வரும் படம் தான் “விடா முயற்சி”. வெளிநாட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் பணியாற்றிய கலை இயக்குனர் மிலன் திடீரென மாரடைப்பால் காலமானார்.

இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அஜித்தின் ஆஸ்தான கலை இயக்குனர் இவர் ஆவார்.

இந்நிலையில், விடா முயற்சி படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க அஜித் சிறப்பு முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு பட நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளாராம்.

Related post