நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

 நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகனான ஜூனியர் பாலையா, இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

1975 முதல் தமிழ் சினிமாவில் நடிகராக நடித்து வரும் ஜூனியர் பாலையா, சமீபத்தில் ‘சாட்டை’ திரைப்படத்தில் தலைமை ஆசிரியராக நடித்ததற்காக புகழ் பெற்ற இவர், பின்னர் 2015களில், கும்கி, தனி ஒருவன், புலி மற்றும் நேர்கொண்ட பார்வை என முக்கிய நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ஜூனியர் பாலையா.

இவரது மறைவுக்கு திரையுலகம் பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்

Related post