Avane Sriman Narayana – திரைப்படம் விமர்சனம்

 Avane Sriman Narayana – திரைப்படம் விமர்சனம்

அவனே ஸ்ரீமன் நாராயண – ஐந்து மொழிகளில் வெளிவந்திருக்கும் ஒரு தரமான திரைப்படம் இந்த ஸ்ரீமன் நாராயண. அறிமுக இயக்குனர் சச்சினின் இயக்கத்தில் அசத்தலாக உள்ளது திரைப்படம். படத்தின் கதை 1980 களில் அமராவதி ஆற்றின் ஊரில் நடப்பது போல சித்தரிக்கப்படுகிறது. 15 வருடங்களுக்கு முன் நாடக கலைஞர்களால் கொள்ளையடிக்கப்படும் அரசாங்க புதையல், அவர்களை கொன்று புதையல் எங்கு இருக்கிறது என தெரியாமல் இறந்து விடும் வில்லன், அந்த புதையலையும் அந்த நாடக கலைஞர்களின் குடும்பங்களையும் அழிக்க துடிக்கும் அவரின் இரு மகன்கள், அவர்களை ஏமாற்றி அந்த புதையலை அடைய நினைக்கும் அந்த ஊரின் போலீஸ் நாயகன் இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை.

படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி காமெடி கலந்த கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாக நடித்தும் கொடுத்துள்ளார், அவரது தமிழ் உச்சரிப்புகள் கச்சிதமாக இருக்கிறது.படத்தின் நாயகி ஷாந்வி கிடைக்கும் வாய்ப்புகளில் ஸ்கோர் செய்கிறார். படத்தின் வில்லன் பாலாஜி மனோகர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். குறிப்பாக சொல்ல வேண்டியது படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தான் இரண்டுமே படத்தின் தரத்தை உயர்த்தி பிடிக்கிறது.படத்தின் எடிட்டிங் மற்றும் காட்சி நேரம் படத்திற்கு பின்னடைவாக உள்ளது.அறிமுக இயக்குனர் சச்சின் முதல் படத்திலேயே முத்திரையை பதித்திருக்கிறார். படத்தின் நம்ப முடியாத ஆச்சரியம் இதன் பட்ஜெட் தான்,தமிழ் இயக்குனர்கள் இவர்களிடம் இருந்து பாடம் கற்கலாம்.

Related post