அயலான் விமர்சனம்

 அயலான் விமர்சனம்

இயக்கம் : ரவிகுமார்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகிபாபு,

இசை: ஏ ஆர் ரகுமான்

ஒளிப்பதிவு: நிரவ் ஷா

கதைப்படி,

இயற்கை விரும்பியான சிவகார்த்திகேயன், தனது கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார்.

அதே சமயம் பூமிக்கு மிக ஆழமான பகுதியில் இருக்கும் ஒரு விதமான வாயுவை வெளியே எடுக்க திட்டமிடுகிறார் வில்லனாக வரும் ஷரத். அதற்காக, வேற்று கிரகத்தில் இருந்து பூமியின் மீது விழுந்த ஒரு விதமான ஸ்பார்க்கை பயன்படுத்துகிறார்.

அந்த ஸ்பார்க்கை கண்டுபிடிப்பதற்காக ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது. வந்த இடத்தில், தனது ஸ்பேஷ் ஷிப்பை வில்லனிடம் இழந்து விட, சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைகிறது அந்த ஏலியன்…

வில்லனின் திட்டம் பழித்ததா ??? ஏலியன் ஸ்பார்க்கை கண்டுபிடித்ததா ??? சிவகார்த்திகேயன் என்ன செய்தார் ??? என்பதே படத்தின் மீதிக் கதை..

குழந்தைகளுக்கு ஏற்ற கதாபாத்திரமாக ஜொலித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆக்சன் காமெடி காதல் என மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வழக்கமான கலகலப்போடும் காட்சிகளில் அனைவருக்கும் பிடித்த நாயகனாகவே ஜொலித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்

ரகுல் ப்ரீத்தி சிங் பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிகளை அளவாகவும் செய்து முடித்திருக்கிறார்.

கருணாகரன் மற்றும் யோகி பாபு காமெடிகள் கலகலப்பபூட்டுகின்றன.

வில்லனின் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது..

தமிழில் இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சிஜி பணிகள் மிகச்சிதமாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்..

ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு பலவீனமாக அமைந்தது. நீரவ் ஷா ஒளிப்பதிவு மேஜிக் காட்டி உள்ளது..

அது மட்டும் இல்லாமல் எடிட்டிங் ஷார்ப்பாக இருந்தது படத்தினை பார்க்கும் ஆவலை இன்னும் தூண்டி இருக்கிறது…

ஏலியன் வரும் காட்சிகள் ஒவ்வொன்றையும் மெனக்கெடல் செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.

ஆங்காங்கே சமூகத்திற்கான தேவையான ஒரு சில நல்ல தகவலையும் விதைத்துச் சென்றிருக்கிறார் ரவிகுமார்….

இந்த விடுமுறைக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கும்படியாக அயலான் வந்திருக்கிறது…

அயலான் – அல்டிமேட்,.. – 3.5/5

Related post