பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பெறும் நட்சத்திரங்கள்!

 பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பெறும் நட்சத்திரங்கள்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை முதல் துவங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கலந்துகொள்ளும் நட்சத்திரங்கள் விபரங்கள் இதோ,

மாடல் அனன்யா ராவ், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை விணுஷா தேவி, குக் வித் கோமாளி புகழ், நடிகை விசித்ரா, பிரபல நடிகர் மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் உள்ளிட்டோரும் இந்த பிக்பாஸ் சீசனில் நடிக்கிறார்கள்.

அதேபோல், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா வனிதா, நடன இயக்குனர் மணிச்சந்திராவ், விஜய் டிவியின் ஆஃபிஸ் சீரியல் புகழ் நடிகர் விஷ்ணு விஜய், நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, விஜய் டிவி புகழ் சரத், சுழல் வெப் சீரிஸ் நடிகர் ஜான்சன், நடிகைகள் உமா ரியாஸ், மூன்நிலா, இந்திரஜா ரோபோ ஷங்கர், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவணன் விக்ரம், பாலசரவணன் மற்றும் சத்யா ஆகியோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், மூத்த திரைப்பட நடிகர் பப்ளு பிரித்விராஜ், நடிகை ரவீணா, விஜே அர்ச்சனா, நடன இயக்குனர் விஜய் வர்மா உள்ளிட்டோரும் பிக்பாஸின் இரண்டாவது வீட்டில் வசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love

Related post