சைத்ரா விமர்சனம்

 சைத்ரா விமர்சனம்

இயக்கம்: ஜெனித் குமார்

நடிகர்கள்: யாஷிகா ஆனந்த் ( சைத்ரா ) அவிதேஜ் ( கதிர் )சக்தி மகேந்திரா ( திவ்யா ), பூஜா ( மதுமிதா ) கண்ணன் ( இன்ஸ்பெக்டர் ), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி

இசை: பிரபாகரன் மெய்யப்பன்

ஒளிப்பதிவு: சதீஷ் குமார்

கதைப்படி,

நாயகி யாஷிகா ஆனந்த், தற்கொலை செய்ய கட்டிடத்தின் மேல் தளத்தில் சென்று நிற்கிறார். எதற்காக தற்கொலை செய்ய நினைக்கிறார் என்ற விளக்கத்திற்கு கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.

இரண்டு நண்பர்களுடன் காரில் செல்கிறார் யாஷிகா ஆனந்த். கார் விபத்துக்குள்ளாக இரண்டு நண்பர்களும் விபத்தில் இறந்து விடுகின்றனர்.

இறந்தவர்கள் ஆவியாக வந்து யாஷிகாவை துன்புறுத்துகின்றனர். யாஷிகாவை எதற்காக இருவரும் துன்புறுத்துகிறார்கள்.? அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்து முடிப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திலும் அதையே செய்திருக்கிறார். சைத்ரா கதாபாத்திரமாகவே மாறி படம் முழுவதும் அந்த கதாபாத்திரத்தோடு நம்மை பயணிக்க வைத்து விட்டார் யாஷிகா. மற்ற படங்களில் இருந்து இப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

யாஷிகாவின் கணவராக வரும் அவிதேஜ், தனக்கு கொடுக்கப்பட்டத்தை அளவோடு அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை அளவாக கொடுத்து காட்சிகள் அனைத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு த்ரில்லிங்க் படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்கத்திற்கு இணையாக இசையும் ஒளிப்பதிவும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

சைத்ரா – ரசிக்க வைக்கும்..

Related post