பிரபல வசனகர்த்தா கிரேஸி மோகனின் மனைவி மறைவு!

 பிரபல வசனகர்த்தா கிரேஸி மோகனின் மனைவி மறைவு!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத வசனகர்த்தாவாக திகந்தவர் நடிகர் கிரேஸி மோகன்.

நாடகத் துறையிலும் இவருக்கான இடம் பெரிதாக இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்தார்.

இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் இவரது மனைவி நளினி கிரேசி மோகன் நேற்று இரவு காலமானார்.. இவரது மறைவுக்கு நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் நட்பில் துவங்கி உறவாக மாறிவிட்ட குடும்பத்தாரிடம் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Related post