மாமன்னனுக்காக தள்ளிச் செல்லும் மாவீரன்!

 மாமன்னனுக்காக தள்ளிச் செல்லும் மாவீரன்!

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வரும் படம் தான் மாமன்னன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தினை வரும் ஜூன் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதே சமயம், அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாவீரன் திரைப்படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஜூன் இறுதியில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவீரன் படத்தை தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிருக்கிறது.

இதன் காரணமாக, மாவீரன் படத்தை ஜூலை இறுதிக்கு வெளியிட ரெட் ஜெயண்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

திட்டமிட்டப்படி மாமன்னன் ஜூன் இறுதியில் வெளியாக இருக்கிறது.

மாமன்னனுக்காக மாவீரன் ரிலீஸ் தேதி தள்ளிச் செல்கிறது.

Related post