அஜித் ஒரு சிறந்த மனிதர் – புகழ்ந்த ரன்பீர் கபூர்

 அஜித் ஒரு சிறந்த மனிதர் – புகழ்ந்த ரன்பீர் கபூர்

அஜித் அடுத்ததாக தனது 62வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது அஜித் இருந்து வருகிறார்.

இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

எப்போதுமே எளிமையாக இருந்து வரும் அஜித்தை பல நட்சத்திரங்கள் புகழ்வர். இந்நிலையில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரன்பீர் கபூர் சமீபத்தில் அஜித்தை பற்றி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், “அஜித் ஒரு சிறந்த மனிதர். அவரை படங்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்றபடி, அவரது புகைப்படங்களை கூட பார்க்க முடிவதில்லை. சமூக வலைதள யுகத்தில் அவர் இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை தாண்டி அவரிடம் இந்த விஷயங்கள் எனக்கு பிடித்திருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

Related post