விஜய் செய்யாததை செய்த தனுஷ்; வசூல் நாயகன் இவர் தான்;

 விஜய் செய்யாததை செய்த தனுஷ்; வசூல் நாயகன் இவர் தான்;

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, ஷா ரா மற்றும் பலர் நடித்த படம் தான் வாத்தி. கடந்த பிப்ரவரி 17ம் தேதி மிகுந்த வரவேற்புடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. வாத்தியை தெலுங்கில் “சார்” என்கிற பெயரில் வெளியிட்டது படக்குழு. தனுஷ் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு படம் சார் ஆகும்.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் ரேஞ்சில் கலக்கிய தனுஷுக்கு தெலுங்கு துறையில் வரவேற்பு எப்படி இருக்கும் என்று படக்குழு சிந்தித்த நிலையில், தமிழ் ரசிகர்களை விட “சார்” படத்தை தெலுங்கு ரசிகர்கள் சற்று அதிகமாகவே கொண்டாடி தீர்த்தனர்.

அந்த வகையில், சார் படம் ரிலீஸான 10 நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “வாரசுடு” திரைப்படம் மொத்தமாகவே ரூ. 26 கோடி வசூலித்திருக்கிறது. இதனை அறிந்த “D” பேன்ஸ் விஜய் ரசிகர்களை ட்ரோல் செய்து வம்புக்கு இழுத்து வருகின்றனர்.

வாத்தி, சார் ஆகிய படங்கள் இதுவரை உலக அளவில் ரூ. 93 கோடி வசூல் செய்திருக்கிறது. விரைவில் ரூ.100 கோடியை தாண்டிவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த சாதனை இந்த வாரமே நடந்துவிடும். வாத்தி படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 40 கோடி வசூல் செய்திருக்கிறது. கணக்கு வாத்தியாரான தனுஷ் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்காக போராடும் கதை தான் வாத்தி. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

மேலும், கலவையான விமர்சனங்களை வாத்தி திரைப்படம் பெற்றிருந்தாலும், இரண்டாம் வாரத்திலும் வாத்தியின் ஓட்டம் நன்றாகவே இருக்கிறது.

Related post