தனுஷின் அடுத்தடுத்த படங்கள்..!?

 தனுஷின் அடுத்தடுத்த படங்கள்..!?

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளிவந்தது. இப்படம் 100 கோடிக்கும் வசூலை வாரிக் குவித்திருந்தது.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பானது தென்காசி குற்றாலம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள இதன் படப்பிடிப்பானது இன்னும் சில நாட்களில் முடிவடையும் என்கிறார்கள்.

இப்படத்தினை முடித்ததும் தனுஷ் இயக்கி நடிக்கும் தனது 50வது படத்தை தொடங்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இதையும் முடித்த பிறகு தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 51வது படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என இரண்டு படங்களையும் முடித்து வைத்து டப்பிங்க் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush, d50, d51, sun pictures, mari selvaraj

Related post