டூடி விமர்சனம்

 டூடி விமர்சனம்
Digiqole ad

கனெக்டிங் டாட்ஸ் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் மதுசூதன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் “டூடி”. ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி, அர்ஜுன் மணிகண்டன் அக்ஷதா, எட்வின் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதைப்படி..,

பெங்களூருவில் 33 வயது வாலிபனாக, பப்பில் இசை வாசித்தும் அங்கு வரும் பெண்களுடன் சுற்றித்திருந்து வருகிறார் நாயகன் கார்த்திக். அவருக்கு காதல் மீதும், கல்யாணம் மீதும் நீண்டகால ரிலேஷன்ஷிப் மீதும் நம்பிக்கை இல்லாத ஒருவர் தான் கார்த்திக்.

அப்போது நண்பனின் கல்யாணத்தில், ஸ்ரீதாவை சந்தித்து அவருடனும் பிளர்ட் செய்கிறார். பின்னர் கார்த்திக் மீது காதல்வசப்படுகிறார் ஸ்ரீதா. எதிர்பார்த்தது போலவே, அந்தக் காதலை ஏற்கமறுக்கிறார் கார்த்திக்.

சில நேரம் சிந்தித்த கார்த்திக்கு, ஸ்ரீதா மீது காதல் வர. அப்போது, நான் 5 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன் என்கிறார் நாயகி. அதன் பின் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? எதற்காக காதல் மேல் ஈர்ப்பில்லாமல் இருக்கிறார் கார்த்திக்? ஒருவருடன் காதல் வசப்பட்டிருக்கும் அதே நேரத்தில் ஸ்ரீதா எதற்காக கார்த்திகை காதலித்தார்? என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது படத்தின் இரண்டாம் பாதி.

கிட்டார் வாசித்து, பெண்களுடன் சுற்றித்திரியும் ஒருவராக நடித்திருக்கும் அறிமுக நாயகன் கார்த்திக்கின் நடிப்பு முற்றிலும் யதார்த்தம். புது நடிகர் என்று எந்த காட்சியிலும் தெரியவில்லை.

பலவித எமோஷன்களை கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார்.

பாடல்கள் அனைத்தும் பக்கா… பின்னணி இசையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம்.

கேமரா ஒர்க் சூப்பர். உடன் நடித்த கலைஞர்களும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

டப்பிங்கில் சிங்க் இல்லை. ஆனால், அதுவும் குறையாக தெரியவில்லை.

டூடி – முதல் பாதி லூட்டி, இரண்டாம் பாதி பியூட்டி.

Digiqole ad
Spread the love

Related post