HOT SPOT – Review 3/5

 HOT SPOT – Review 3/5

இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்

நடிகர்கள்: கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி.

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

இசை: சதீஷ் ரகுநந்தன்

தயாரிப்பு: கோகுல் பினாய்

கதைப்படி,

நான்கு கதைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. ஒருவொரு கதைக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை.. ஆனால், நான்கு கதைகளும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பாசிடிவான ஒரு விமர்சனத்தோடு கதைக்குள் நகரலாம்..

முதலாவது கதை: Happy Married Life

காதலர்களான ஆதித்யா பாஸ்கரும் கெளரி கிஷனும் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.

இந்த திருமணம் தலைகீழாக நடக்கிறது. அதாவது, மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்ட திருமணம் அரங்கேறுகிறது.

மணமகள் வீட்டிற்கு தாலி கட்டிக் கொண்டு மணமகன் குடியேறுகிறார்.

மாமியார் மருமகள் சண்டை இல்லாமல் மாமனார் மருமகன் சண்டை அங்கு நடக்கிறது.

அதன் பிறகு இந்த கதையில் என்ன சொன்னார்கள் என்பதே இந்த கதையின் மீதிக் கதை.

2. Golden Rules

சாண்டி மாஸ்டரும் அம்மு அபிராமியும் காதலர்கள். இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அம்மு அபிராமி அவரது மாமாவை திருமணம் செய்ய இவரது பெற்றோர் முடிவெடுக்க, தான் சாண்டியை காதலிப்பதாக கூறி விடுகிறார் அம்மு அபிராமி. ஒரு வழியாக அம்மு அபிராமி வீட்டில் சம்மதம் வாங்கி விடுகிறார்.

சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

இருவரும் காதலிப்பதாகவும் வீட்டில் கூறிவிட, பின் அம்மு அபிராமி யார் என்று அவரிடம் விசாரித்து அறிந்து கொள்கின்றனர் சாண்டியின் பெற்றோர்.

அதன்பிறகு அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று அரங்கேறுகிறது. அது என்ன என்பது இந்த கதையின் மீதிக் கதை.

3. Thakkali Cutney

இங்கும் ஒரு ஜோடி. சுபாஷும் ஜனனியும் காதலர்கள். பத்திரிகையாளராக வருகிறார் ஜனனி. தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார் சுபாஷ்.

வேலையை இழந்து விடுகிறார் சுபாஷ். சில மாதங்கள் ஓடி விட, விரக்தியில் இருந்து வருகிறார் சுபாஷ். ஒருவரின் அறிமுகம் கிடைக்க, அவர் ஆண் விபச்சார தொழில் செய்ய சுபாஷிடம் அழைப்பு விடுக்கிறார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து, ஆண் விபச்சார தொழில் செய்கிறார் சுபாஷ்.

இந்த விஷயம் ஜனனிக்கு தெரியவரும் வேளையில் என்ன நடந்தது என்பது கதையின் மீதிக் கதை.

4. Fame

கலையரசன் மற்றும் சோபியா இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் இருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும், நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார் அந்த சிறுமி.

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். இதனால், இவர்களது வாழ்க்கையில் பண ரீதியாகவும் வளர்ச்சி அடைகிறது.

இந்நிலையில், இந்த சிறுமி ஒரு நாள் இறந்து விடுகிறார். இந்த சிறுமியின் இறப்புக்கு சோபியா தான் காரணம் என்று கலையரசன் கூறுகிறார். எதற்காக அப்படி கூறினார் என்பது இந்த கதையின் மீதிக் கதை.

இந்த நான்கு கதைகளும் சமூகத்திற்கு மிக முக்கியமான ஒரு மெசேஜை சொல்லிவிட்டுச் சென்றதோடு மட்டுமல்லாமல், பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. இந்த நான்கு கதைகளில் ஒரு கதையிலாவது “அட ஆமால்ல நாமளும் இப்படி தானே இருந்தோம், இருக்கோம்” என்று எண்ணும்படியான ஒரு வாழ்வியலை கொடுத்திருக்கிறார்கள் நடித்த நடிகர்கள் அனைவவருமே.

எந்த ஒரு நடிகர்களையும், இந்த இடத்திற்கு இவர்கள் வேண்டாம், இந்த நடிகர் இந்த கேரக்டருக்கு செட் ஆகல, என்று சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து கதாபாத்திரமும் அந்தந்த கேரக்டர்களோடு ஒன்றி நடித்து கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

திரைக்கதை நகர்ந்த விதமாக இருக்கட்டும், படத்தின் வசனங்களாக இருக்கட்டும் என படத்தில் அவ்வளவு பாசிடிவான விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். தமிழ் சினிமாவிற்கு தரமான படம் தான்…. எந்த இடத்திலும் சோர்வடைய வைக்காமல் கதையை நகர்த்திச் சென்ற இயக்குனருக்கு மீண்டும் ஒரு வாழ்த்துகள்.

Hot spot – Worth Movie

Related post