IKK Movie Review Tamil

 IKK Movie Review Tamil
கால்பந்து விளையாட்டு வீரரான வசந்த் சந்திரசேகர் (யோகேஷ்) சிறுவயதில் மனரீதியாக பாதிக்கப்பட்டவர். டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணிக்காக விளையாடும் போது எதிர்பாராதவிதமாக அவர் காலிலும் தலையிலும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஜெர்மனியில் இருக்கும் அவருடைய தந்தை வசந்த்தின் பாதுகாப்புக்காக கார் ஓட்டுநர் ஞான பிரகாசத்தை துணைக்கு அனுப்பி வைக்கிறார். வசந்த்தின் மனைவிக்கு ஞான பிரகாசத்தை பிடிக்கவில்லை இருப்பினும் சகித்துக் கொள்கிறார். வசந்த் சந்திரசேகர் மனோ ரீதியான பிரச்சினையில் இருந்து மீண்டு கால்பந்தாட்டத்தில் உச்ச நட்சத்திர ஆட்டக்காரராக ஜொலித்தாரா? இல்லை மனநல பாதிப்பால் தன்னை இழந்தாரா? என்பது தான் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை.
இந்தப்படத்தில் ஆழ்மன பதிவுகள் ஒன்று நடந்தவையாக இருக்கும், இல்லை நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லும், ஒரு சில ஏழைக்கு எப்படியாவது தானும் ஒருநாள் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஒரு சில பணக்காரர்களுக்கு தான் தான் ஒசத்தி தனக்கு கீழ் உள்ளவர்களையும், ஏழைகளையும் மதிக்காமல் கர்வத்துடன் நடந்து கொள்வார்கள் என்பதையும், சகல வசதி படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப பிரச்சனைகள் நிறைந்திருக்கும், இதுபோன்ற கருத்துக்களை தன் கற்பனை கலந்து திரைக்கதையின் மூலம் இயக்குனர் சொல்ல முயற்சித்து இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பொருளாதாரரீதியில் தன் கையில் எதுவும் இல்லாதவனும், தன்னிடம் அனைத்தும் வைத்து இருப்பவனும் தன் முடிவில் உறுதியாக இருப்பார்கள் இறுதியில் இதில் யார் வெல்வார்கள் என்ற முடிவை ரசிகர்களிடம் ஒப்படைத்து விடுகிறார் இயக்குனர் பாபு தமிழ். புதுமையான திரைக்கதையை உருவாக்கியதற்காக அவரை பாராட்டலாம் இதில் நடித்திருக்கும் யோகேஷ், அணிக்கா விக்ரமன், குரு சோமசுந்தரம் இவர்கள் மூவருமே தங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கால்பந்தாட்ட வீரரின் உடல் மொழியை அற்புதமாக வெளிப்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். காட்சிகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்து கதையிலிருந்து நம் கவனம் சிதறாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன். படத்தின் பின்னணி இசை கதையின் வேகத்தை கூட்டுகிறது. புதுமையான திரைக்களத்தையும், திரைக்கதையையும் நம்பி இப்படத்தை தயாரித்த நவீன் மற்றும் பிரபுவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
புதுமையான முயற்சிகளுக்கு ரசிகர்கள் எப்போதும் வரவேற்பு நிச்சயம் கொடுப்பார்கள்.

Related post