500 கோடி க்ளப்பில் இணைந்த ஜெயிலர்!

 500 கோடி க்ளப்பில் இணைந்த ஜெயிலர்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “ஜெயிலர்”. இம்மாதம் 10 ஆம் தேதி வெளியான இப்படம், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டதால், வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது.

படம் வெளியாகி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 500 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் 500 கோடி வசூலை குவித்த படங்களின் விபரங்கள் இதோ

பாகுபலி 2 – 1810 கோடி
ஆர் ஆர் ஆர் – 1267 கோடி
கே ஜி எஃப் 2 – 1259 கோடி
2PointO – 800 கோடி
பாகுபலி – 650 கோடி
ஜெயிலர் – 514 கோடி
பொன்னியின் செல்வன் 1 – 500 கோடி

இன்னும் பல சாதனைகளை ஜெயிலர் நிகழ்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

jailer, box office, rajinikanth

Related post