ஜிகிரி தோஸ்து விமர்சனம்
இயக்கம்: அரண்
நடிகர்கள்: ஷரீக், அரண், ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, சீவம்
ஒளிப்பதிவு: சரண்
இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி
கதைப்படி,
ஷரீக், அரண், ஆஷிக் மூவரும் நண்பர்கள். கல்லூரி படிக்கும் அரண், போன் டேப்பிங்க் செய்யும் மிஷினை கண்டுபிடிக்கிறார்.
வில்லனால் நடிகை பவித்ரா கடத்தபடுகிறார். அப்போது காரில் பவித்ரா தவிப்பதை மூன்று நண்பர்களும் பார்த்து விடுகின்றனர். வில்லனை தொடர்ந்து காரில் பாலோ செய்கின்றனர் மூவரும்.
இறுதியாக, கடத்திய கும்பல் யார்.? பவித்ராவை மூவரும் மீட்டார்களா.? அரண் கண்டுபிடித்த மிஷினுக்கு அங்கீகாரம் கிடைத்தா.?? உள்ளிட்ட பதிலுக்கு விடை தான் இந்த படத்தின் மீதிக் கதை.
மூவரும் தங்களால் முடிந்த ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் சற்று முயற்சி கொடுத்திருந்திருக்கலாம். சின்ன சின்ன இடங்களில் கூட இன்னும் சற்று அதிகமான ரியாக்ஷனை கொடுத்திருந்திருக்கலாம்.
சின்னதொரு கதை தான் என்பதால் பெரிதான ட்விஸ்ட் காட்சிகளை இதில் எதிர்பார்க்க முடியவில்லை. வில்லனை சீரியஸாக கொண்டு செல்லும் நேரத்தில் ஆங்காங்கே அவரையும் வைத்து காமெடி செய்ததால் காட்சிகளை சீரியஸாகவும் பார்க்க முடியவில்லை.
நாயகி அம்மு அபிராமி, தன்னால் முடிந்ததை கொஞ்சம் அதிகமாகவே செய்திருக்கிறார். நாடகத்தன்மையை சற்று தவிர்த்திருந்திருக்கலாம்.
இசை ஓகே ரகம் தான், ஒளிப்பதிவு பளிச்.
கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜிகிரி தோஸ்து – நட்பு கூட்டணியை இன்னும் பலப்படுத்தியிருக்கலாம்… – 2.5/5