இன்று வெளியாகிறது கமல்ஹாசனின் ”KH 234” பட அறிவிப்பு வீடியோ!

 இன்று வெளியாகிறது கமல்ஹாசனின் ”KH 234” பட அறிவிப்பு வீடியோ!

உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரைப்படம் #KH234. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், ஆர். மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், சண்டைப்பயிற்சி அன்பறிவு, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியில் இணைகிறார்கள்.

நவம்பர் 7-ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு #KH234 திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது. டைட்டில் அறிவிப்பிற்கென இயக்குனர் மணிரத்னம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள வீடியோ நவம்பர் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது

Related post