ஒரே நாளில் மோதும் ரஜினி & தனுஷ் படங்கள்!

 ஒரே நாளில் மோதும் ரஜினி & தனுஷ் படங்கள்!

ஜெயிலர் படத்தினைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதேபோல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி வரும் படம் தான் “D50”. தனுஷின் 50வது படமான இது மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

“தலைவர் 170” ம்ற்றும் “D50” இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இரண்டு படங்களும் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post