மெய்ப்பட செய் திரைவிமர்சனம்

 மெய்ப்பட செய் திரைவிமர்சனம்

ஆதவ் பாலாஜி, மதுணிகா, பி.ஆர்.தமிழ் மற்றும் பலர் நடிப்பில் வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மெய்ப்படசெய்”.

கதைப்படி,

நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது. காரணம் சாதி.

இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டு மூன்று நண்பர்களுடன் ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இவர்கள், அந்த வீட்டினால் பிரபல தாதாவிடம் சிக்குகிறார்கள்.

இறுதியில், பிரச்சனையில் இருந்து அவர்கள் மீண்டார்களா? நண்பர்களுக்கு வந்த பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி, முதல் படம் போல் இல்லாமல் காதல், செண்டிமெண்ட், சண்டைக்காட்சி நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார்.

மதுனிகா அழகு தேவதையாக வளம் வந்து நம்மை ரசிக்க வைத்துள்ளார்.

நாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

ஆடுகளம் ஜெயபால் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

சமூகயத்தின் முக்கியம் இரண்டு பிரச்சனையான பாலியல் குற்றத்தையும், சாதி வன்மத்தையும் உரக்க பேசியுள்ளார் இயக்குனர் வேலன். திரைக்கதையில் சிறிது கவனம் செலுத்தியிருந்தால் படம் கூடுதல் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல், காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை ரசிக்கும்படியும், சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.

பரணியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.

மெய்படச்செய் – மனதில் பட்டத்தை செய்

Related post