மிஷன் சாப்டர்1 விமர்சனம்

 மிஷன் சாப்டர்1 விமர்சனம்

இயக்கம்: விஜய்

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்‌ஷன், நிமிஷா, விராஜ், அபிஹாசன், பரத் கோபன்னா

ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்

இசை : ஜி வி பிரகாஷ்குமார்

கதைப்படி,

தனது 4 வயது மதிக்கத்தக்க மகளின் ஆபரேஷனுக்காக தனது ஜெயிலர் பதவியை உதறிவிட்டு, லண்டன் செல்கிறார் அருண் விஜய்.

அங்கு, பிரபலமான மருத்துவமனையில் அருண் விஜய்யின் மகளுக்கு ஆபரேஷன் செய்ய ஏற்பாடு நடக்கிறது. அதே சமயம், இந்தியாவின் வெடிகுண்டு சம்பவம் செய்வதற்காக 3 தீவிரவாதிகளை லண்டன் ஜெயிலில் இருந்து தப்பிக்க ப்ளான் செய்கிறார் வில்லனான பரத் கோபன்னா.

இலண்டனில் பணம் வாங்க செல்லும் இடத்தில் சண்டை ஏற்பட, லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறார் அருண் விஜய்.

3 தீவிரவாதிகள் இருக்கும் சிறைக்குச் செல்கிறார் அருண் விஜய். அந்த ஜெயில் நெட் வொர்க் அனைத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வருகிறார் பரத் கோபன்னா.

பரத் கோபன்னாவின் திட்டத்தை சிதைக்க உள்ளே நுழைகிறார் அருண் விஜய்.

அருண் விஜய் உள்ளே இருப்பதை அறிந்து மிரண்டு போகிறார் பரத் கோபன்னா.

அருண் விஜய் யார்.? தீவிரவாதியின் திட்டம் பழித்ததா இல்லையா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆக்‌ஷன் படம் என்றால் இவரை விட்டால் வேறு யாரு இருக்கா என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார் அருண் விஜய். 100 பேரை அடித்தால் கூட நம்பலாம் என்று சொல்லும் அளவிற்கு மிரள வைக்கும் ஆக்‌ஷனை கொடுத்திருக்கிறார். தனது மகளுக்காக கண்கள் கலங்கி நிற்கும் காட்சிகளாக இருக்கட்டும், தனது மகளை வீரமாக வளர்த்திருக்கிறேன் என்று சொல்லும் இடத்திலாக இருக்கட்டும் என காட்சிக்கு காட்சி தனது அசத்தலான நடிப்பைக் கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் அருண் விஜய்.

இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு மிளிர்கிறார் அருண் விஜய். இடை வேளை காட்சியை சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

லண்டன் சிறையின் ஜெயிலராக ஆக்‌ஷனிலும் அதகளம் செய்திருக்கிறார் ஏமி ஜாக்சன். தனது அழகு நடிப்பை அளவு குறையாமல் நடித்துமுடித்திருக்கிறார் நிமிஷா.

விஜய்யின் வழக்கமான படங்களில் இருந்து இது மாறுபட்டு நின்றாலும், அதை ரசிக்கும்படியாகவே நிற்கிறார்.

வழக்கமான அப்பா – மகள் செண்டிமெண்ட் காட்சிகள் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஜெயிலில் நடக்கும் சண்டைக் காட்சிகள் பிரமிக்கவைத்திருக்கிறது.

ஜி வி பிரகாஷின் பின்னணி இசை படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.

சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவு ஜெயிலுக்குள் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை திறம்பட கையாண்டிருக்கிறது.

தமிழில் ஜெயிலுக்குள் சண்டைக் காட்சியை இவ்வளவு பிரம்மாணடமாக எடுக்க முடியுமா என்ற ஏக்கத்திற்கு சரியான தீணியாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

கதைக்கு தேவையான ஆக்‌ஷன் காட்சிகளை கொடுத்திருக்கிறார். இவரா அபிஹாசன் என்று சொல்லும் அளவிற்கு சிங் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

பரத் கோபன்னா வில்லத்தனம் ப்ளஸ்.

மிஷன் சாப்டர்1 – அதிரடி ஆக்‌ஷன்.. –  3.25/5

Related post