அடுத்த படத்தின் கதாநாயகனை அறிவித்த இயக்குனர் மோகன்.ஜி;

 அடுத்த படத்தின் கதாநாயகனை அறிவித்த இயக்குனர் மோகன்.ஜி;

இயக்குனர் மோகன் ஜி, GM பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் “பகாசூரன்” படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இதற்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான “திரௌபதி”, “ருத்ர தாண்டவம்” படத்தை போல் வெற்றிப்படமாக அமையவில்லை “பகாசூரன்”.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா ஆகியோர் நடித்துள்ளனர்.

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

பகாசூரன் படத்தின் ஓட்டத்தை பாராட்டும் விதமாக பகாசூரன் படத்தை விநியோகம் செய்த GTM நிறுவனம் இயக்குனர் மோகனுக்கு தங்க மோதிரத்தையும், 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றையும் அவருக்கு பரிசாக அளித்தது.

இந்த நிகழ்வில் இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், “சில மீடியாக்களுக்கு.. இவரு யாருன்னு தெரியுதா.. காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் Richard Rishi சார்.. நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க” என மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.

Related post