மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்!?
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வருகிறது “விடா முயற்சி”. அஜித் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த படத்திற்கான செய்திகள் கசிய துவங்கியிருக்கிறது.
அதன்படி, அஜித்குமாரின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி படத்தினை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தினை தெலுங்கு உலகின் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக தகவல்.