கங்குவா படப்பிடிப்பில் விபத்து; நூலிழையில் தப்பினார் சூர்யா!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
மிகப்பெரும் பொருட்செலவில் பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் நடைபெற்று வந்த படப்பிடிப்பானது தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி-யில் இன்று நடந்த படப்பிடிப்பின் போது ரோப் கேமரா ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த சூர்யா நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவிற்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.