நாட் ரீச்சபுள் விமர்சனம்

 நாட் ரீச்சபுள் விமர்சனம்

விஷ்வா, சாய் தன்யா, விஜயன் நடிப்பில், சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “நாட் ரீச்சபுள்”.

கதைப்படி..,

எமர்ஜென்சி போன் ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வருகிறது. அந்த எண்ணை கண்டறிந்து, லோகேஷனுக்கு செல்கிறது காவல்துறை.

அங்கு ஒரு பெண் தூக்கில் தொங்கியபடியும், மற்றொரு பெண் மண்ணில் புதைபட்டும் பிணமாக இருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சயடைந்த எஸ் ஐ சுபா, வழக்கை தீவிரமாக விசாரணை செய்ய ஆரம்பிக்கிறார்.

உடன் சுபாவின் முன்னாள் கணவரும் இன்ஸ்பெக்டருமான விஷ்வாவும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோவை கமிஷ்னர் உத்தரவு பிறப்பிக்கிறார்.

சஸ்பென்ஷனில் இருந்தாலும், கமிஷ்னருக்காக இந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார் விஷ்வா.

இந்த கொலைகள் யார் செய்தது.?
எதற்காக செய்தார்கள் ? இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக் கதை…

நாயகன் விஷ்வா, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். ஆனாலும் ஆங்காங்கே அமெட்சூர் நடிப்பு வந்து செல்கிறது.

நாயகி சுபாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

சாய் தான்யாவின் கதாபாத்திரம் தான் படத்திற்கு தூணாக அமைந்துள்ளது. கதாபாத்திரத்தின் வலுவரிந்து நடித்திருக்கிறார் சாய் தான்யா.

மாணவியாகவும், மன நிலை சரியில்லாத போதும், அதன் பிறகு எடுத்த தோற்றமும் கதையின் ஓட்டத்திற்கு நன்றாகவே ஈடு கொடுத்தது.

ஆரம்பத்தில் ஏனோவென்று சென்று கொண்டிருந்த கதையில், யார் இந்த கொலையை செய்தது என அறிந்ததும் கதையில் புது பாய்ச்சல் ஆரம்பிக்கிறது.

க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட காட்சியை மட்டும் சற்று இயக்குனர் யோசித்திருந்திருக்கலாம். அது தான் முடிவு என்றல்ல. திரைக்கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் தேவை.

ஒளிப்பதிவில் சுகுமாரன் சுந்தர் காட்சிகளை கட்சிதமாக கொடுத்திருந்தார்.

சரண் குமாரின் இசையில் பின்னணி இசை கதையின் பயணத்திற்கும் ஈடு கொடுத்து படத்தின் வேகத்திற்க்கு உதவியை இருக்கிறது.

நாட் ரீச்சபுள் – ஒன் டைம் வாட்சப்பில்

Related post