கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹைமர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது!

 கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹைமர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது!

சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே 96வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி திரையரங்கில் நடைபெற்றது.

இதில் வருகை தந்த பிரபலங்களுக்கு சிறப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வருகை தந்துள்ளனர்.

ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு 13 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 7 விருதுகளை தட்டித் தூக்கியது.

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை ‘The Holdovers’ படத்திற்காக Da’Vine Joy Randolph வென்றார்

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘War Is Over! Inspired by the Music of John & Yoko’! வென்றது

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை ‘The Boy and the Heron’ பெற்றுள்ளது

சிறந்த மூல திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Anatomy Of A Fall திரைப்படம் வென்றது!

ஒப்பனை மற்றும் சிகை அலங்கார பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது POOR THINGS திரைப்படம்

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை ஜஸ்டின் டிரெய்ட், ஆர்தர் ஹராரி ஆகியோர் வென்றனர்

Related post